Vidaamuyarchi: மகிழ் திருமேனி இயக்கத்தில் நடிகர் அஜித் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் ‘விடாமுயற்சி’. இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது.
இப்படத்தில் நடிகர் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடிக்கிறார். மேலும், இப்படத்தில் நடிகை ரெஜினாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் விடாமுயற்சியில் அஜித்துக்கு வில்லனாக ஆரவ் நடித்து வருவதாகக் கூறப்படுகிறது.
மேலும் ஆக்ஷன் கிங் அர்ஜுனும் இந்த படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ‘விடாமுயற்சி’ படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கவுள்ளார்.
இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த அக்டோபர் மாதம் அஜர்பைஜான் நாட்டில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது படப்பிடிப்புக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தை தொடர்ந்து நடிகர் அஜித், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ‘குட் பேட் அக்லி’ படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தின் ஷூட்டிங் ஜூன் மாதம் தொடங்கவுள்ளது.
இந்த படம் ‘பொங்கல்’ தினத்தன்று ரிலீஸாகவுள்ளதாக ‘குட் பேட் அக்லி’ பட போஸ்டரில் குறிப்பிட்டுள்ளது. இதனால், ‘விடாமுயற்சி’ படத்தின் படப்பிடிப்பை சீக்கிரம் முடிக்க அஜித் கண்டிஷன் போட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் தற்போது ‘விடாமுயற்சி’ படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, ஏப்ரல் 25ஆம் தேதி முதல் அஜர்பைஜானில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.
இந்த ஷுட்டிங்கில் அஜித்தும் அர்ஜூனும் இணைந்து நடிக்க உள்ளனர். மேலும், திரிஷாவும் இதில் இணையவுள்ளதாக கூறப்படுகிறது. மே மாதத்துடன் இந்த படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து, விரைவில் ரிலீஸுக்குத் தயாராகும் என கூறப்படுகிறது.