மார்ச் மாதத்துடன் ‘விடாமுயற்சி’ படப்பிடிப்பு நிறைவு..! அஜித் பிறந்த நாளன்று ரிலீஸ்?

0
98

VidaaMuyarchi’: மகிழ் திருமேனி இயக்கத்தில் நடிகர் அஜித் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் ‘விடாமுயற்சி’. இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்தில் நடிகர் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடிக்கிறார். மேலும், இப்படத்தில் நடிகை ரெஜினாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

விடாமுயற்சியில் அஜித்துக்கு வில்லனாக ஆரவ் நடித்து வருவதாகக் கூறப்படுகிறது. மேலும் ஆக்‌ஷன் கிங் அர்ஜுனும் இந்த படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ‘விடாமுயற்சி’ படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கவுள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த அக்டோபர் மாதம் அஜர்பைஜான் நாட்டில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் புதிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.

அதன்படி, ‘விடாமுயற்சி’ படத்தின் படப்பிடிப்புகள் அஜர்பைஜான் நாட்டில் நடைபெற்று வந்த நிலையில் தற்போது படப்பிடிப்பு நிறைவடைந்ததாக படக்குழு அதிகாரப் பூர்வமான தகவலை வெளியிட்டது.

அடுத்தக்கட்ட படப்பிடிப்பு வேறு இடத்தில் விரைவில் தொடங்கும் என படக்குழு தெரிவித்துள்ளது. சமீபத்தில் ‘விடாமுயற்சி’ படத்தின் ஓடிடி உரிமத்தை நெட்பிளிக்ஸ் பெற்றுள்ளது. மேலும், இந்த படம் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது.

அஜர்பைஜான் நாட்டில் தொடர்ந்து நடைபெற்று வந்த படப்பிடிப்புகள், அடுத்தகட்ட படிப்பிடிப்பு வட இந்தியாவில் நடைபெற இருக்கிறது. அதன்பிறகு இறுதிக்கட்ட படப்பிடிப்பு புனேயில் நடைபெறுகிறது.

இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் 30 நாட்கள் மட்டுமே நடைபெற உள்ள நிலையில் மார்ச் மாதத்தோடு விடாமுயற்சி படத்தின் அனைத்துக் கட்ட படப்பிடிப்பும் முடிந்துவிடும் என படக்குழு தெரிவித்துள்ளது.

உடனடியாக இறுதிக் கட்டப் பணிகள் தொடங்கப்பட்டு மே மாதத்தில் விடாமுயற்சி படத்தை திரைக்கு கொண்டு வர படக்குழு திட்டமிட்டுள்ளது. மேலும், இந்த படம் மே மாதம் ரிலீஸ் ஆகுவதால் அஜித்தின் பிறந்த நாளன்று ‘விடாமுயற்சி’ ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here