‘விடாமுயற்சி’ படத்தில் அஜித்தின் பெயர் என்ன தெரியுமா?.. ரசிகர்கள் உற்சாகம்..!

0
52

VidaaMuyarchi Update: விடாமுயற்சி படத்தில் நடிகர் அஜித் மற்றும் நடிகை திரிசா ஆகியோரது கதாபாத்திரத்தின் பெயர் வெளியாகியுள்ளது.

மகிழ் திருமேனி இயக்கத்தில் நடிகர் அஜித் நடிப்பில் பிரம்மாண்டமாக அஜர்பைஜானில் உருவாகி வரும் திரைப்படம் ‘விடாமுயற்சி’. இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தில் நடிகர் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடிக்கிறார். மேலும், இப்படத்தில் நடிகை ரெஜினாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

விடாமுயற்சியில் அஜித்துக்கு வில்லனாக ஆரவ் நடித்து வருகிறார். மேலும் ஆக்‌ஷன் கிங் அர்ஜுனும் இந்த படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த நிலையில், விடாமுயற்சி படத்தில் இரண்டு அர்ஜுன்கள் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

விடாமுயற்சி திரைப்படத்தின் கதாநாயகன் அஜித்தின் கதாபாத்திரத்திற்கு அர்ஜூன் என பெயர் வைக்கப்பட்டுள்ளதாகவும், கதாநாயகி திரிசாவுக்கு கயல் என பெயர் வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், ஷூட்டிங் ஸ்பாட்டில் யாரேனும் அர்ஜுன் என அழைத்தால் இரண்டு பேரும் திரும்பிப் பார்ப்பதாக கூறப்படுகிறது. மேலும், படத்தில் அஜித்தின் பெயர் அர்ஜூன் என்ற தகவல் வெளியான நிலையில் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

இதையும் படிங்க: மதுபாட்டிலில் வழக்கறிஞர் பேட்ஜ்..! ‘சரக்கு’ பட வழக்கில் நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here