நல்ல கதைக்காக காத்திருக்கும் விடுதலை பட நாயகி..!

0
95

தமிழ் சினிமாவில் ‘இது என்ன மாயம்’, ‘சில சமயங்களில்’ உள்ளிட்ட படங்களில் துணை இயக்குநராக பணியாற்றியவர் பவானிஸ்ரீ. இவர், க.பெ.ரணசிங்கம் படத்தின் மூலம் நடிகை ஆனார்.

அதன் பிறகு ‘பாவ கதைகள்’ என்ற படத்தில் நடித்தார். அதனைத் தொடர்ந்து ‘விடுதலை’ படத்தில் தமிழரசி கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

தற்போது ‘விடுதலை 2’ படத்திலும் நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து இயக்குநர் ஆனந்த் இயக்கத்தில் ‘நண்பன் ஒருவன் வந்த பிறகு’ என்ற படத்தில் நடித்து வருகிறார். மேலும், இந்த படத்தில் ஆனந்த் ராம், மிர்சி விஜய் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

பவானிஸ்ரீ விடுதலை படத்தில் நடித்து நல்ல பெயர் எடுத்தார். இதன் காரணமாக அடுத்தடுத்து வாய்ப்புகள் கிடைக்கும் என எதிர்பார்த்துக் காத்திருக்கிறார். ஆனால், அவரை தேடி வந்த கதைகள் அவருக்கு திருப்தி தரவில்லை என தெரிகிறது.

இதனால் நல்ல கதைகளுக்காக காத்திருக்கிறார். அதேசமயம், தனியாக போட்டோ ஷூட் நடத்தி, தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here