‘பகத் பாசில் ஒரு வேற்றுக் கிரகவாசி’ – விக்னேஷ் சிவன் இப்படி சொல்ல என்ன காரணம்?..

0
67

Vignesh Shivan: ஜித்து மாதவன் இயக்கத்தில் பகத் பாசில் நடிப்பில் வெளியான மலையாளப் படம் ‘ஆவேஷம்’ . இந்த படத்தில் மன்சூர் அலிகான், ஆசிஸ் வித்யார்தி, சஜின் கோபு, பூஜா மோகன்ராஜ் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர்.

கடந்த 11ஆம் தேதி ரிலீஸான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. சுமார் ரூ.20 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் வெளியாகி 8 நாட்களில், உலகம் முழுவதும் ரூ.59 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

இந்த நிலையில், இப்படத்திற்கு இயக்குநர் விக்னேஷ் சிவன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, “இந்த படத்தை பார்த்து வியப்படைந்தேன். பகத் பாசில் சார் நீங்கள் வேறு கிரகத்தில் இருந்து வந்துள்ளீர்கள்.

தொடர்ந்து மலையாள சினிமா, பாக்ஸ் ஆபிஸில் அடித்து நொறுக்கி வருகிறது. இந்த படத்தை எடுத்த படக்குழுவிற்கும், பகத் பாசில் சாருக்கும் வாழ்த்துகள்” என குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here