‘நயன்தாராவை காதலிக்க ஹெல்ப் பண்ணது இவர் தான்’ – சீக்ரெட்டை உடைத்த விக்னேஷ் சிவன்..!

0
128

Vignesh Shivan: இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கும், நயன்தாராவுக்கு இடையே காதல் ஏற்பட ‘நானும் ரவுடிதான்’ படம் தான் காரணம். அந்த படத்தின் மூலமாக தான் இவரும் நேரடியாக அறிமுகமானார்கள். நயனிடம் கதை சொல்ல சென்றபோது தான் அவரை முதன்முதலில் விக்னேஷ் சிவன் பார்த்திருக்கிறார்.

அதன்பிறகே அவர்களுக்குள் காதல் ஏற்பட்டதாக விக்னேஷ் சிவன் கூறியிருக்கிறார். இந்த நிலையில், அவர்களுக்குள் ஏற்பட்ட காதலுக்கு முன்னணி நடிகர் தான் காரணம் என விக்னேஷ் சிவன் கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், “எங்களுக்குள் காதல் ஏற்பட நடிகர் தனுஷ் தான் காரணம்.

நானும் ரவுடி தான் படத்தின் கதையை விஜய்சேதுபதியிடம் கூறினேன், அவர் கதையில் கன்வின்ஸ் ஆகவில்லை. இதனால், அவர் நடிக்க ஒப்புக் கொள்ளவில்லை. அப்போது, படத்தின் தயாரிப்பாளர் தனுஷ், நயன்தாராவிடம் கதை கூறச் சொன்னார்.

உடனே நயன்தாராவிடம் கதை சொன்னேன், உடனே அவர் ஒப்புக்கொண்டார். அதன் பிறகு மீண்டும் விஜய் சேதுபதியிடம் கேட்டவுடன் அவரும் நடிக்க ஒப்புக் கொண்டார். அப்போது நயன்தாராவிடம் அதிக நேரம் செலவிட முடிந்தது.

அதன் காரணமாக தான் இருவருக்கும் இடையே நல்ல புரிதல் ஏற்பட்டு காதலாக மாறியது. அதனால், எங்கள் காதலுக்கு மறைமுகமாக உதவி செய்த தனுஷ்க்கு நன்றி” என கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here