‘Vijay 69’ : ‘RRR’ பட தயாரிப்பாளருடன் இணையும் விஜய்..!

0
133

‘Vijay 69’ : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய், லியோ படத்தை தொடர்ந்து அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘The Greatest of All Time’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதனைத் தொடர்ந்து விஜய்யின் அடுத்தடுத்த படங்கள் தொடர்பான தகவலும் அவ்வப்போது வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது ஒரு புதிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.

தெலுங்கில் இயக்குநர் ராஜமவுலி இயக்கத்தில் ஜுனியர் என்டிஆர், ராம் சரண் நடிப்பில் வெளிவந்த ‘RRR’ படத்தைத் தயாரித்தவர் டிவிவி தனய்யா. தற்போது விஜய்யின் 69ஆவது படத்தைத் தயாரிக்க இருப்பதாக பேச்சுவார்த்தை நடந்து வந்ததாக கூறப்படுகிறது.

மேலும், இந்த பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்ததாகவும், இதனால் டிவிவி தனய்யா தயாரிப்பில் விஜய் நடிப்பது உறுதி என டோலிவுட் வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றன.

இந்தப் படம் மிகப் பிரம்மாண்டமான படமாக உருவாக இருப்பதாகவும், படத்தின் இயக்குநர் யார் என்பது குறித்து விரைவில் முடிவு அறிவிக்கப்படும் எனவும் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: டின்னர் புகைப்படத்தை வெளியிட்ட ‘ரிவால்வர் ரீட்டா’..!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here