விஜய் ஆண்டனியுடன் இணைந்த உதயநிதி ஸ்டாலின்..! ‘ரோமியோ’ படத்தின் புதிய அப்டேட்..!

0
130

இயக்குநர் விநாயக் வைத்தியநாதன் இயக்கத்தில் நடிகர் விஜய் ஆண்டனி நடிக்கும் திரைப்படம் ‘ரோமியோ’. இந்த திரைப்படத்தில் விஷாலின், மிருணாளினி ரவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்த படத்தை விஜய் ஆண்டனி வழங்கும் குட் டெவில் புரொடக்ஷன் தயாரிக்கிறது. இந்தப் படம் இந்த ஆண்டு கோடை விடுமுறையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் அண்மையில் படப்பிடிப்பு நிறைவு பெற்றது. இந்த நிலையில், இப்படத்தின் புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதன்படி, ‘ரோமியோ’ திரைப்படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமத்தை உதயநிதி ஸ்டாலினின் ‘ரெட் ஜெயன்ட் மூவிஸ்’ நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இதனைப் படக்குழு போஸ்டர் மூலம் பகிர்ந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here