‘Vijay Antony’: இயக்குநர் சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான திரைப்படம் ‘ரத்தம்’. மேலும், இந்த படத்தில் நடிகை மஹிமா நம்பியார், நந்திதா ஸ்வேதா, ரம்யா நம்பீசன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
இந்த படம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 6ஆம் தேதி ரிலீஸானது. கிரைம் திரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்த ‘ரத்தம்’ படத்தில் பெரும்பாலான சூழ்நிலைகள், திருப்பங்களும் கணிக்க முடியாத வகையில் இருந்தன.
மேலும், இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. தொடர்ந்து, இந்த படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் ரிலீஸானது. இந்த ‘ரத்தம்’ படம் ஹிந்தியிலும் டப்பிங் செய்யப்பட்டது.
இந்த நிலையில், தற்போது இயக்குநர் சி.எஸ்.அமுதன் தனது ‘X’ தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ‘ரத்தம் படத்தின் ஹிந்தி டப்பிங் பதிப்பு யூடியூப்பில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
ஹிந்தியில் வெளியான இந்த படத்திற்கு 20 மில்லியன் பார்வையாளர்கள் மற்றும் சுமார் 250K லைக்குகள் கிடைத்துள்ளன” என பதிவிட்டுள்ளார். இந்த பதிவை பார்த்த விஜய் ஆண்டனி மறுபதிவு செய்துள்ளார்.
அவர் வெளியிட்ட பதிவில், “பேசாம அடுத்த படம் ஹிந்தில பண்ணலாம் அமுதன்” என குறிப்பிட்டுள்ளார். ஒரு தமிழ் படம் தமிழில் ரிலீஸாகி வரவேற்பு கிடைக்காத நிலையில் அதே படத்தை ஹிந்தியில் டப்பிங் மட்டும் செய்து வெளியிடப்பட்டது.
ஆனால், அந்த டப்பிங் படத்திற்கு இவ்வளவு வரவேற்பு கிடைத்துள்ளதால் விரக்தியில் இந்த பதிவு அவர்கள் வெளியிட்டிடுக்கலாம் என தெரிகிறது. இந்த பதிவு தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.