‘வெரி ஸ்வீட்’.. ‘மிகச் சிறந்த நடிகை’.. – ‘ஹிட்லர்’ பட நாயகியை பாராட்டிய விஜய் ஆண்டனி..

0
136

இயக்குநர் தனா இயக்கத்தில் நடிகர் விஜய் ஆண்டனி நடித்துள்ள திரைப்படம் ‘ஹிட்லர்’. விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக ரியா சுமன் நடித்துள்ளார். மேலும், சரண்ராஜ், கவுதம் மேனன், ரெடின் கிங்ஸ்லி, விவேக் பிரசன்னா, ஆடுகளம் நரேன், இயக்குநர் தமிழ் உள்ளிட்ட முன்னனி நடிகர்கள் நடித்திருக்கின்றனர்.

செந்தூர் பிலிம் இண்டர்நேஷனல் (Chendur film international) சார்பில் ராஜா மற்றும் சஞ்சய் குமார் இப்படத்தை தயாரித்துள்ளனர். இப்படத்திற்கு விவேக் மெர்வின் இசையமைத்துள்ளார். நவீன்குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

சமீபத்தில் வெளியான ‘ஹிட்லர்’ படத்தின் டீசர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது. ‘ஹிட்லர்’ திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த நிலையில் இன்று இப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.

அப்போது பேசிய நடிகர் விஜய் ஆண்டனி, “இயக்குநர் தனாவின் வானம் கொட்டட்டும் படத்திற்கு மிகப்பெரிய ஃபேன். நானும் ராஜா சாரும் யாரை வைத்து அடுத்த படம் எடுக்கலாம் என்றபோது இருவரிடமும் வந்த பெயர் தனா. குறைந்த காலத்தில் ஒரு அழகான அவுட்புட்டை தந்துள்ளார். அவர் இன்னும் உயரம் செல்வார்.

ரெடின் கிங்ஸ்லி திரையில் வேறொரு நடிகராக காமெடியில் அசத்துகிறார். ரியா சுமனுக்கு இவ்வளவு தமிழ் தெரியுமென்பதே தெரியாது. வெரி ஸ்வீட், மிகச் சிறந்த நடிகை. டாணாக்காரன் தமிழ், கவுதம் மேனன் இருவருடனும் நடித்தது மகிழ்ச்சி.

விவேக் பிரசன்னா நடிப்பு மிகவும் பிடிக்கும் அவருக்கும் வாழ்த்துகள். விவேக், மெர்வின் இருவரும் அருமையான இசையைத் தந்துள்ளனர். ஆக்ஸிடெண்டுக்குப் பிறகு என்னைப் பூப்போல பார்த்துக்கொண்டார் ஸ்டண்ட் இயக்குனர் முரளி அவர்களுக்கு நன்றி.

ஒளிப்பதிவாளர் நவீன்குமார் என் அடுத்த படத்திற்கும் அவர் தான் கேமராமேன், சிறந்த ஒளிப்பதிவாளர். படத்தில் உழைத்த அனைவருக்கும் நன்றிகள். ‘ஹிட்லர்’ படம் கண்டிப்பாக உங்களுக்குப் பிடிக்கும் நன்றி” என பேசினார்.

இதையும் படிங்க: ‘குழந்தைகளை மையப்படுத்திய படம்’ – அடுத்த படத்திற்கு அப்டேட் கொடுத்த பார்த்திபன்…!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here