‘எனக்கு நீங்கள் கொடுத்த ஆதரவை மறக்க முடியாது’ – விஜய் தேவரகொண்டா

0
91

நடிகர் விஜய் தேவரகொண்டா கதையின் நாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக மிருனாள் தாக்கூர் நடித்துள்ளார். இயக்குநர் பரசுராம் பெட்லா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படத்தை கே.யூ.மோகனன் ஒளிப்பதிவு செய்ய, கோபி சுந்தர் இசையமைத்திருக்கிறார்.

ஏப்ரல் 5 ஆம் தேதி உலகம் முழுக்க தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் இந்த படம் வெளியாகிறது. இதையொட்டி சென்னையில் இப்படக்குழ கலந்து கொண்ட நிகழ்ச்சி நடைபெற்றது.

அதில் கலந்து கொண்டு பேசிய விஜய் தேவரகொண்டா, “தமிழ் இயக்குநர்களின் படங்களில் நடிப்பதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும்.

சென்னைக்கு வரும்போதெல்லாம் மிகவும் உற்சாகமாக இருக்கிறேன். என்னுடைய நடிப்பில் வெளியான ‘அர்ஜுன் ரெட்டி’ படத்திற்கு நீங்கள் அளித்த ஆதரவு மறக்க முடியாது.

தற்போது மீண்டும் இயக்குநர் பரசுராமுடனும், தயாரிப்பாளர் தில் ராஜுடனும் இணைந்து ‘தி ஃபேமிலி ஸ்டார்’ படத்தின் மூலம் உங்களை சந்திக்கிறேன். இந்தப் படத்தில் கதையின் நாயகனாக நடுத்தர வர்க்க இளைஞராக நடித்திருக்கிறேன்.

அன்பு செலுத்துவதிலும், காதலிப்பதிலும், நேசிப்பதிலும், கோபத்திலும் ஒரு எக்ஸ்ட்ரீம் நிலையை எதிர்கொள்பவன் தான் இப்படத்தில் நாயகன். இது ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கும்” என்று தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here