விஜய் மீது காலணி வீசிய விவகாரம்..! காவல் நிலையத்தில் புகார்.. தீவிர விசாரணையில் போலீஸ்..!

0
144

Actor Vijay: நடிகர் விஜய் மீது காலணி வீசிய நபர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கோயம்பேடு காவல் நிலையத்தில் தென்சென்னை மாவட்ட விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் புகார் அளித்துள்ளனர்.

தேமுதிக தலைவரும், நடிகருமான கேப்டன் விஜயகாந்த கடந்த 28ஆம் தேதி காலமானார். சென்னை கோயம்பேட்டிலுள்ள தேமுதிக அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள், கட்சித் தொண்டர்கள், நடிகர்கள், ரசிகர்கள் என ஏராளமானோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

அந்த வகையில், விஜயகாந்த்தின் இறப்பு செய்தியைக் கேட்ட நடிகர் விஜய் ஷூட்டிங்கை நிறுத்திவிட்டு விஜயகாந்த்திற்கு அஞ்சலி செலுத்துவதற்காக நேரில் சென்றார். விஜயகாந்த் உடல் வைக்கப்பட்டிருந்த தேமுதிக அலுவலகத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு இருந்தனர்.

அந்த கூட்டத்திற்குள் நுழைந்து நடிகர் விஜய், கேப்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். அஞ்சலி செலுத்திய பின்னர், அங்கிருந்து தனது காரை நோக்கி நடந்து சென்றார். அப்போது, அங்கிருந்தவர்களில் சிலர் விஜய்யை தரைக்குறைவாக பேசி வெளியே போகுமாறு அச்சுறுத்தினர்.

இதனைத் தொடர்ந்து, விஜய் மீது காலணி வீசப்பட்டது. இந்த விடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், நடிகர் விஜய் மீது காலணி வீசிய நபர் மீது கடும் நடவடிக்கை எடுக்கக்கோரி தென்சென்னை மாவட்ட விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள், சென்னை கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

இதையும் படிங்க: லியோ பட இயக்குநருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு..! அதிரடி தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள்..!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here