விஜய்யின் கடைசி பட இயக்குநர் வெற்றிமாறன்?.. சமூக அக்கறையுள்ள படம் எடுக்க வாய்ப்பு..!

0
113

தமிழ் சினிமாவின் முன்னனி நடிகரான விஜய் தற்போது முழு அரசியல்வாதியாக மாற இருக்கிறார். தற்போது அவர் நடித்துவரும் ‘The Greatest of All Time’ படத்திற்குப் பிறகு அடுத்தாக ஒரே ஒரு படத்தில் மட்டும் நடிக்க இருப்பதாகவும் அதன் பிறகு படங்களில் நடிக்கப்போவதில்லை என அறிவித்துள்ளார்.

இதனால், விஜய்யின் 69ஆவது படம் அவரது கடைசி படமாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. அவரது கடைசி படமாக உருவாக உள்ள அந்தப் படத்தை ‘RRR’ தயாரிப்பாளர் டிவிவி தனய்யா தயாரிக்கப் போவதாக கூறப்படுகிறது.

அந்தப் படத்தை இயக்கப் போவது யார் என்பது குறித்து விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை. இதனால், பலரும் பல்வேறு இயக்குநர்களின் பெயர்களை சொல்லி வருகின்றனர். தமிழ் இயக்குநர்கள் அட்லீ, ஹெச்.வினோத், கார்த்திக் சுப்புராஜ் எனவும் தெலுங்கு இயக்குநர் கோபிசந்த் மலினேனி என கூறி வருகின்றனர்.

இந்த நிலையில், தற்போது விஜய்யின் கடைசி படத்தை வெற்றிமாறன் இயக்க வாய்ப்பிருப்பதாக சினிமா வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது. கடந்த வருடம் நடைபெற்ற ஒரு நிகழ்வில் இயக்குநர் வெற்றிமாறன் விஜய்க்கு கதை ரெடியாக இருப்பதாகவும் கூறிய விரைவில் படம் எடுக்கப்படும் எனவும் கூறியிருந்தார்.

மேலும், நடிகர் விஜய் அரசியலில் ஈடுபட இருப்பதால் அவர் தனது கடைசி படத்தை சமூக அக்கறையுள்ள படமாக தான் எடுக்க நினைப்பார். அதனடிப்படையில் பார்க்கும்போது விஜய், வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

விஜய்யின் கடைசி படத்தை எடுக்கப்போவது யார் என ரசிகர்கள் குழப்பமடைந்து வரும் நிலையில் தற்போது வெளியாகியுள்ள இந்த செய்தி மேலும், குழப்பமடைய செய்துள்ளது. மேலும், இன்னும் சில திங்களில் விஜய்யின் கடைசி பட இயக்குநர் யார் என்பது குறித்து தகவல் வெளியாகும் அதுவரை காத்திருக்க வேண்டும்..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here