வெற்றி துரைசாமியின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய விஜய்?..

0
114

சென்னை முன்னாள் மேயர் சைதை சா. துரைசாமியின் மகன் இயக்குநர் வெற்றி துரைசாமி ஹிமாச்சல பிரதேசத்தில் கார் விபத்தில் ஆற்றில் விழுந்து காணாமல் போனார். தொடர்ந்து எட்டு தினங்களுக்குப் பிறகு அவரது சடலம் மீட்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து அவரது சடலத்தை உடற்கூராய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தொடர்ந்து, அங்கிருந்து அவரது உடல் சென்னை கொண்டுவரப்பட்டது.

வெற்றி துரைசாமியின் உடலுக்கு திரைப்பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர். வெற்றி துரைசாமியின் நெருங்கிய நண்பரான நடிகர் அஜித் நேரில் சென்று வெற்றியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.

அந்த வகையில், தமிழக வெற்றி கழக தலைவரும் நடிகருமான விஜய், வெற்றி துரைசாமி உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக சைதாப்பேட்டை வரை வந்ததாக கூறப்படுகிறது.

மேலும், அங்கு அதிக கூட்டம் இருந்ததன் காரணமாக விஜய் அங்கிருந்து திரும்பி சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது. உடனடியாக இது குறித்து விஜய், தனது தமிழக வெற்றி கழக பிரமுகர்களிடம் கூறி வெற்றி உடலுக்கு அஞ்சலி செலுத்த கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here