‘சிக்ஸு.. சிக்ஸு..’ நடிகர் விஜய் கிரிக்கேட் விளையாடும் வீடியோ..!

0
150

Vijay Playing Cricket: நடிகர் விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘The Greatest of All Time’ படத்தில் நடித்து வருகிறார். விருவிருப்பாக படப்பிடிப்புகள் நடைபெற்று வருவதாகவும், இப்படட்தின் படப்பிடிப்புகள் மார்ச் மாதம் முடிந்து ஜூன் மாதம் திரைக்கு வரவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், தற்போது நடிகர் விஜய் வாரிசு படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில், படக்குழு உடன் சேர்ந்து கிரிக்கெட் விளையாடும் பழைய வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

அதில், பாடலாசிரியர் பேட்டிங் செய்கிறார். அப்போது அடித்த பந்து சிக்ஸரை நோக்கி சென்றது. ஆனால், எதிர் அணி அது பவுண்டரி என கிளைம் பண்ணுகின்றனர்.

அப்போது அங்கிருந்த விஜய் தனது அணிக்கு சப்போர்ட்டாக, ‘சிக்ஸு.. சிக்ஸு.. ஏப்பா நீங்க அடுச்சிங்கள சிக்ஸு.. அதேதான்..’ என விஜய் சண்டை போட்டுப் பேசுகிறார்.

வாரிசு படத்தின்போது எடுக்கப்பட்ட இந்த வீடியோவை பாடலாசிரியர் விவேக், நீண்ட நாட்களுக்கு பிறகு தனது சமூகவலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: ‘விஜய் சேதுபதி இந்தி படங்களில் நடிக்கலாமா?.. இந்தி தயாரிப்பாளர்களிடம் சம்பளம் வாங்கலாமா?..’ – பாஜக மாநில தலைவர் அண்ணாமலை!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here