மாஸ் அப்டேட் கொடுத்த ‘மகாராஜா’ படக்குழு..

0
134

‘Maharaja Update’: இயக்குநர் நிதிலன் சுவாமிநாதன் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி தனது 50ஆவது படத்தில் நடிக்கிறார். இந்த படத்திற்கு ‘மகாராஜா’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்தில் விஜய் சேதுபதியுடன் சேர்ந்து மம்தா மோகன்தாஸ், அனுராஜ் காஷ்யப், நட்டி நடராஜ் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடிக்கின்றனர். ‘மகாராஜா’ படத்திற்கு அஜனீஷ் லோகநாத் இசையமைக்கிறார். மேலும், தினேஷ் புருஷோத்தமன் ஒளிப்பதிவு செய்கிறார்.

சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. அதில், சலூன் கடை நாற்காலியில் அமர்ந்து, தனது கையில் பட்டாக்கத்தியுடன் அமர்ந்திருக்கிறார். இடது காதில் பெரிய அளவில் கட்டுப்போடப்பட்டுள்ளது.

மேலும், ‘மகாராஜன்’ படத்தில் பல வன்முறை காட்சிகள் இருக்கலாம் என்பது இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மூலம் தெரியவந்துள்ளது. படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

மேலும், இந்த ‘மகாராஜா’ படம் வருகிற சம்மருக்கு ரிலீஸாக வாய்ப்பிருப்பதாக முன்னதாக அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது படம் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, ‘மகாராஜா’ படம் வருகிற மே மாதல் ரிலீஸகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here