‘கத்ரீனாவுடன் நடித்தது நம்பமுடியாத ஒரு விஷயம்’ – விஜய் சேதுபதி..!

0
126

#MerryChristmasPressMeet: விஜய் சேதுபதி, கத்ரினா கைஃப் நடித்து திரைக்கு வரவுள்ள திரைப்படம் ‘மெரி கிறிஸ்துமஸ்’. இந்த படத்தை டிப்ஸ் ஃபிலிம்ஸ் மற்றும் மேட்ச்பாக்ஸ் பிக்சர்ஸ் (Matchbox pictures) இணைந்து தயாரித்து வழங்கவுள்ளது. ஜானி கதார், பத்லாபூர் மற்றும் அந்தாதுன் ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் ஶ்ரீராம் ராகவன் இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.

இயக்குநர் ஶ்ரீராம் ராகவனுக்கு இது இவருடைய முதல் தமிழ்ப் படம் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல கத்ரினா கைஃப் முதல்முறையாக தமிழில் கதாநாயகியாக அறிமுகமாகிறார். ‘மெரி கிறிஸ்துமஸ்’ இரண்டு மொழிகளில் வெவ்வேறு துணை நடிகர்களுடன் படமாக்கப்பட்டுள்ளது. தமிழ்ப் பதிப்பில் ராதிகா சரத்குமார், சண்முகராஜா, கவின் ஜெய் பாபு மற்றும் ராஜேஷ் வில்லியம்ஸ் ஆகியோர் நடித்துள்ளனர்.

அதே நேரத்தில் அதே வேடங்களில் இந்தி பதிப்பில் சஞ்சய் கபூர், வினய் பதக், பிரதிமா கண்ணன், டின்னு ஆனந்த் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். இது நிச்சயமாக உலகெங்கிலும் உள்ள ரசிகர்களுக்கு கூடுதல் எதிர்பார்ப்பை உருவாக்கும் என படக்குழு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் தற்போது, ‘மெரி கிறிஸ்துமஸ்’ படத்தின் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்று வருகிறது. அப்போது பேசிய நடிகர் விஜய் சேதுபதி, “இயக்குநர் ஸ்ரீராம் ராகவன் நான் நடித்த 96 படத்தைப் பார்த்து தான் என்னை தொடர்பு கொண்டார். தொடர்ந்து, ஸ்ரீராம் ராகவனும். நானும் வீடியோ கால் மூலம் பேசத் தொடங்கினோம். அவரது முதல் படமான ‘ஏக் ஹசினா தி’ படத்தின் மூலம் நான் ஈர்க்கப்பட்டேன்.

இதனைத் தொடர்ந்து, நான் ஸ்ரீராமுடன் இணைந்து பணியாற்ற விரும்பினேன். கத்ரீனாவுடன் திரையைப் பகிர்வது நம்பமுடியாத விஷயமாக இருந்தது. இப்படம் ஜனவரி 12 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது, படம் அனைவரும் ரசிக்கும்படி இருக்கும் என நம்புகிறேன்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: ‘கேப்டன் விஜயகாந்த்திற்கு நினைவேந்தல் கூட்டம்’ – தென்னிந்திய நடிகர் சங்கம் அறிவிப்பு!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here