Vijay about kalaignar: கருணாநிதியின் நூற்றாண்டு விழா நேற்று ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் நடைபெற்ற நிலையில் அதில் நடிகர் விஜய் கலந்துகொள்ளாத நிலையில் தற்போது கலைஞர் குறித்து விஜய் பேசிய பழைய வீடியோ வைரலாகி வருகிறது.
சென்னை கிண்டியில் உள்ள ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சார்பில் கருணாநிதியின் நூற்றாண்டு விழா ‘கலைஞர் 100’ என்ற பெயரில் நடத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நடிகர்கள், ரஜினி, கமல், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட பல நட்சித்திரங்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
ஆனால், இந்த நிகழ்வில் முன்னனி கதாநாயகர்கள் விஜய், அஜித் கலந்துகொள்ளவில்லை. இந்த நிலையில் நடிகர்கள் அஜித், சூர்யா, விஜய் ஆகியோர் ஒரே மேடையில் நின்று கலைஞர் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசும் வீடியோ வைரலாகி வருகிறது.
அதில் பேசிய விஜய், “கலைஞர் நகர் என பெயர் வைக்கப்பட்டுவதாக கேள்விபட்டேன். அங்கு அவருக்கு பெயர் மட்டும் வைக்கக்கூடாது, கலைஞர் அவர்களுக்கு சிலை ஒன்றும் வைக்க வேண்டும்.
அவருடைய 100ஆவது வயதில், இதேபோல ஒரு நிகழ்ச்சியில் அவருடன் சேர்ந்து அந்த சிலையை நானும் ரசிக்க வேண்டும்” எனக் கூறினார். விஜய்யின் இந்த பேச்சுக்கு மேடையில் இருந்த நடிகர்கள் அஜித், சூர்யா ஆகியோர் கைத் தட்டி தங்களது ஆதரவைத் தெரிவித்தனர்.
இந்த நிலையில், நேற்று கொண்டாடப்பட்டு கலைஞர் 100 விழாவில் விஜய், அஜித் ஆகியோர் கலந்துகொள்ளவில்லை. ஆகையால், நடிகர் விஜய் பேசிய இந்த பழைய வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: ‘கலைஞர் 100’ நிகழ்ச்சி: வருகை தராத முன்னனி நட்சத்திரங்கள் யார்?..