‘இதனால் தான் அரசியலுக்கு வந்தேன்’ – ரஜினியிடம் சீக்ரெட்டை ஓபன் பண்ண விஜய்..!

0
99

நடிகர் விஜய், ‘தமிழக வெற்றி கழகம்’ என்ற பெயரில் அரசியல் கட்சி தொடங்கி 2026ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெறவுள்ளதாக கூறியிருக்கிறார்.

விஜய்யின் இந்த அரசியல் வருகைக்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்து கூறி வரவேற்றாலும், சிலர் விஜய்யை விமர்சனம் செய்யத் தொடங்கியிருக்கின்றனர்.

இந்த நிலையில், கட்சி தொடங்கிய விஜய்க்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். விஜய் ‘தமிழக வெற்றி கழகம்’ கட்சி தொடங்கியது குறித்து சென்னை விமான நிலையத்தில் நடிகர் ரஜினிகாந்திடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த நடிகர் ரஜினிகாந்த், ‘நடிகர் விஜய்க்கு வாழ்த்துகள்’ என கூறிவிட்டுச் சென்றார்.

இந்த நிலையில், தற்போது தமிழக வெற்றி கழக தலைவர் விஜய், தனக்கு வாழ்த்து கூறிய ரஜினிகாந்த்திற்கு தொலைபேசி மூலம் அழைத்து நன்றி கூறியதாக தெரிகிறது.

மேலும், தான் அரசியலில் ஈடுபடுவது மற்றும் அரசியலில் வந்ததற்கான காரணம் உள்ளிட்ட பலவற்றை குறித்து ரஜினியிடம் வெளிப்படையாக கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், என்ன பேசினார்கள் என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here