ஷூட்டிங் ஸ்பாட்டில் கூடிய ரசிகர்கள்.. செல்பி எடுத்த தளபதி..!

0
1218

‘The Greatest of all Time’ இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் படம் ‘The Greatest of all Time’. இந்த படத்தை ஏஜிஎஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரித்து வருகிறது. தளபதிக்கு ஜோடியாக நடிகை மீனாட்சி சவுத்ரி நடிக்கிறார். மேலும், சினேகா மற்றும் லைலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளனர்.

அதுமட்டுமல்லாமல் நடிகர்கள் இந்த படத்தில் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, ஜெயராம், கணேஷ், யோகிபாபு, அஜ்மல் அமீர், வைபவ், பிரேம் ஜி, அரவிந்த் ஆகாஷ், அஜய் ராஜ், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். சித்தார்த்த முனி ஒளிப்பதிவு செய்கிறார். சமீபத்தில் ‘The Greatest of all Time’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

‘The Greatest of all Time’ படத்தை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியானது. படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகள் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடந்து வருகிறது.

இதற்காக நேற்று நடிகர் விஜய் கேரளா வந்தார். விஜய்யை வரவேற்க லட்சக்கணக்கான ரசிகர்கள் அங்கு கூடி இருந்தனர். தொடர்ந்து, விமான நிலையத்தில் வந்த விஜய் காரில் ஏறிய பின்னரும் அந்த காரை பின் தொடர்ந்து விஜய்யுடன் சென்றனர்.

இந்த நிலையில் தற்போது, திருவனந்தபுரத்தில் உள்ள கிரீன் ஃபீல்ட் இண்டர்நேஷ்னல் மைதானத்தில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதனையறிந்த ரசிகர்கள் ஷூட்டிங் ஸ்பாட்டிற்கே நேரடியாக சென்றனர்.

இதனையறிந்த விஜய், வழக்கம்போல் அங்கிருந்த வேனின் மீது ஏறி தனது ரசிகர்களைப் பார்த்து கை அசைத்தார். தொடர்ந்து அங்கிருந்த ஆயிரக்கணக்கான ரசிகர்களுடன் செல்பி எடுத்துக்கொண்டார். தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here