புதுச்சேரி படப்பிடிப்பில் குவிந்த ரசிகர்கள்: செல்பி எடுத்துக்கொண்ட விஜய்.!

0
84

Vijay: நடிகர் விஜய் ‘தமிழக வெற்றி கழகம்’ என்ற கட்சியின் பெயரை வெளியிட்டுள்ளார். இதற்கான அறிக்கையும் விஜய் வெளியிட்டுள்ளார். தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்கியதும் கட்சியின் கொடி, சின்னம் அறிவிக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

ஒருபுறம் தனது திரைப்பயணத்தையும் மருபுறம் அரசியல் பயணத்தையும் பார்த்து வருகிறார். அந்த வகையில், இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் ‘The Greatest of all Time’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஹைதராபாத், சென்னை ஆகிய இடங்களில் நடைபெற்ற நிலையில் தற்போது புதுச்சேரியில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், படப்பிடிப்புத் தளத்தில் விஜய் ரசிகர்கள் குவியத் தொடங்கினர். இதனையறிந்த ரசிகர்கள், தனது ரசிகர்களைச் சந்தித்து வழக்கம்போல் செல்பி எடுத்துக்கொண்டார்.

நடிகர் விஜய் கட்சித் தொடங்கிய பிறகு, ரசிகர்களை முதன்முறையாக சந்திக்கிறார். தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் எடுத்துக்கொண்ட செல்பி வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here