ஓட்டு போட வரும் விஜய்.. இந்த முறை நடந்து வருவாரா?.. வெயிட்டிங்கிள் ரசிகர்கள்..!

0
94

‘The Greatest of all Time’: இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் படம் ‘The Greatest of all Time’. இந்த படத்தை ஏஜிஎஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரித்து வருகிறது.

தளபதிக்கு ஜோடியாக நடிகை மீனாட்சி சவுத்ரி நடிக்கிறார். மேலும், சினேகா மற்றும் லைலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளனர்.

அதுமட்டுமல்லாமல் நடிகர்கள் இந்த படத்தில் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, ஜெயராம், கணேஷ், யோகிபாபு, அஜ்மல் அமீர், வைபவ், பிரேம் ஜி, அரவிந்த் ஆகாஷ், அஜய் ராஜ், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

படத்தின் படப்பிடிப்பு ரஷ்யாவில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நாளை (ஏப்ரல் 19) நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுவதால் விஜய் கட்டாயம் வாக்கு செலுத்த வருவார். இதனால், அப்பகுதி ரசிகர்கள் அனைவரும் தயாராக இருப்பார்கள்.

ஏனென்றால் விஜய் போன முறை சைக்கிளில் வந்தது போல இந்த முறை நடந்து வந்தாலும் வரலாம் என விஜய் ரசிகர்கள் நாளை காலை முதலே விஜய் வீட்டின் வாசலில் காத்திருப்பார்கள்.

ரஷ்யாவில் இருந்து தமிழக வெற்றிக் கழக கட்சியின் தலைவராக விஜய் நாளை கட்டாயம் வாக்கு செலுத்த வருவார். மேலும், அவரது வருகையை எதிர்பார்த்து ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here