தம்பிக்கு காஸ்ட்லி கார் கொடுத்து சர்ப்ரைஸ் பண்ண விஜய பிரபாகரன்..!

0
120

நடிகர் மற்றும் தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் கடந்த ஆண்டில் உடல் நலக்குறைவால் காலமான சூழலில் அவரது சமாதிக்கு தினந்தோறும் ஏராளமான ரசிகர்கள், தொண்டர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் வந்தவண்ணம் உள்ளனர்.

இன்று விஜயகாந்த் மறைந்து 100 நாள் நிறைவடைந்த நிலையில் அவரது நினைவிடத்தில் மகன் சண்முக பாண்டியனுடன் சென்ற பிரேமலதா விஜயகாந்த் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார்.

இந்நிலையில் இன்றைய தினம் கேப்டன் விஜயகாந்தின் இளைய மகனான சண்முக பாண்டியன் இன்று தன்னுடைய 31ஆவது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார்.

சண்முக பாண்டியன் நடிப்பில் உருவாகி வரும் படை தலைவன் படத்தின் டீசர் இன்றைய தினம் பிறந்த நாள் தினத்தை முன்னிட்டு வெளியானது.

சண்முக பாண்டியன் இந்த ஆண்டில் தன்னுடைய தந்தையை இழந்ததன் காரணமாக தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அதனால் அவரது பிறந்த நாள் மிகவும் எளிமையாக கொண்டாடப்பட்டது.

இந்த நிலையில் சண்முக பாண்டியன் பிறந்த நாளை சிறப்பாக்கும் வகையில் அவரது சகோதரன் விஜய பிரபாகரன் தம்பிக்கு காஸ்ட்லியான Porsche கார் வாங்கி பரிசாக வழங்கியுள்ளார். இந்த விஷயம் ரசிகர்கள் மற்றும் தொண்டர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here