சரக்கு பஞ்சாயத்து முடிந்தது.. மீண்டும் களத்தில் இறங்கிய விஜய் ஆண்டனி..!

0
79

Romeo: இயக்குநர் விநாயக் வைத்தியநாதன் இயக்கத்தில் நடிகர் விஜய் ஆண்டனி நடிக்கும் திரைப்படம் ‘ரோமியோ’. இந்த திரைப்படத்தில் விஷாலின், மிருணாளினி ரவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்த படத்தை விஜய் ஆண்டனி வழங்கும் குட் டெவில் புரொடக்ஷன் தயாரிக்கிறது. இந்தப் படம் இந்த ஆண்டு கோடை விடுமுறையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

‘ரோமியோ’ திரைப்படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமத்தை உதயநிதி ஸ்டாலினின் ‘ரெட் ஜெயன்ட் மூவிஸ்’ நிறுவனம் கைப்பற்றியுள்ளது. சமீபத்தில் வெளியான ‘ரோமியோ’ படத்தின் செகண்ட் சிங்கிளான ‘வெத்தல’ பாடல் மாபெரும் ஹிட்டடித்துள்ளது.

இடையில். ‘ரோமியோ’ படத்தின் செய்தியாளர் சந்திப்பின்போது விஜய் ஆண்டனி ஜீசஸ் மது அருந்துவார் என கூறி அது பெரிய சர்ச்சையானது. பலரும் தங்களது எதிர்ப்பை தெரிவித்து வந்தனர்.

இந்த விவகாரம் குறித்து விஜய் ஆண்டனியும் அறிக்கை வெளியிட்ட நிலையில் இந்த சர்ச்சை சமாதானமானது. இந்த விவகாரத்தினால் பெரும் அப்செட்டில் இருந்த விஜய் ஆண்டனி, தற்போது மீண்டும் சினிமா களத்தில் இறங்கியிருக்கிறார்.

அதன்படி, ‘ரோமியோ’ படத்தின் டிரைலர் இன்று மாலை வெளியாகும் என அறிவித்துள்ளார். இது குறித்த போஸ்டரை விஜய் ஆண்டனி தனது ‘X’ தளத்தில் வெளியிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here