தமிழக வெற்றிக் கழகத்திற்கு தான் எனது ஆதரவு.. விஜய் ஆண்டனி பேச்சு..!

0
119

Vijay Antony: இயக்குநர் விநாயக் வைத்தியநாதன் இயக்கத்தில் நடிகர் விஜய் ஆண்டனி நடிக்கும் திரைப்படம் ‘ரோமியோ’. இந்த திரைப்படத்தில் விஷாலின், மிருணாளினி ரவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்த படத்தை விஜய் ஆண்டனி வழங்கும் குட் டெவில் புரொடக்ஷன் தயாரிக்கிறது. இந்தப் படம் இந்த ஆண்டு கோடை விடுமுறையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

‘ரோமியோ’ திரைப்படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமத்தை உதயநிதி ஸ்டாலினின் ‘ரெட் ஜெயன்ட் மூவிஸ்’ நிறுவனம் கைப்பற்றியுள்ளது. சமீபத்தில் வெளியான ‘ரோமியோ’ படத்தின் செகண்ட் சிங்கிளான ‘வெத்தல’ பாடல் மாபெரும் ஹிட்டடித்துள்ளது.

இந்த படம் வருகிற ஏப்ரல் 11ஆம் தேதி உலகளவில் ரிலீஸாகவுள்ளது. இதனால் படக்குழுவினர் தீவிரமாக புரமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், இன்று கோயம்புத்தூரில் பட புரமோஷனுக்காக நடிகர் விஜய் ஆண்டனி மற்றும் நடிகை மிருணாளினி ஆகியோர் சென்றனர்.

அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த விஜய் ஆண்டனி பேசுகையில், “ரோமியோ படம் அனைவரும் குடும்பத்துடன் வந்து பார்க்கும் படம். இந்த படத்தின் மூலம் திருமணத்திற்குப் பிறகு கணவன் – மனைவி இடையே காதல் எப்படி இருக்க வேண்டும் என்பதை காட்டி இருக்கிறோம்” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “நடிகர் விஜய் தற்போது தொடங்கியுள்ள அரசியல் கட்சிக்கு எனது ஆதரவு உண்டு. அனைத்து கட்சிகளுக்கும் நான் ஆதரவு அளிக்கிறேன். அரசியல் கட்சியினர் ஓட்டுக்குப் பணம் கொடுத்தால், சூழ்நிலை கருதி அந்த பணத்தை வாங்கிக் கொள்ளுங்கள், ஆனால் நல்லவர்களைப் பார்த்து ஓட்டுப் போட வேண்டும்” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here