‘மக்கள் இதை செய்தால் பச்சை துரோகத்துக்கு சமம்’ – விஜய் சேதுபதி ஆடியோவால் பரபரப்பு..!

0
84

Vijay Sethupathi: நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அனைத்துக் கட்சி தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். பலரும் தேர்தல் குறித்த விழிப்புணர்வுகளையும் ஏற்படுத்தி வருகின்றனர்.

அந்த வகையில் நடிகர் விஜய் சேதுபதி தேர்தல் விழிப்புணர்வு குறித்து பேசிய வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், “நாம் எல்லாரும் ஆசையா எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த தேர்தல் வந்துவிட்டது.
வழக்கமாக தேர்தல் வரும்போது எல்லாருக்கும் ஒரு மனப்பான்மை இருக்கும். யார் வந்தால் நமக்கென்ன, இல்லை யார் காசு கொடுக்கிறார்களோ அவர்களுக்கு ஓட்டு போடுவோம். ஒட்டு போட்டு ஒன்றும் ஆகப் போவதில்லை.

இது போன்ற மனநிலையை தூக்கி ஓரமா வைச்சிடுங்க. நாம, நமக்காக இல்லையென்றாலும் நமது குழந்தைகளோட எதிர்காலத்திற்கும், நமது அடுத்த தலைமுறையோட எதிர்காலத்திற்கும் நிச்சயமாக ஓட்டு போட வேண்டும்.

காசு வாங்கிட்டு ஓட்டு செலுத்துவது, காசுக்காக ஓட்டை விற்பதும் எவ்வளவு பெரிய துரோகம். அதேபோல ஓட்டுப் போடாமல் இருப்பதும் பச்சை துரோகம். நம்மை ஆளப்போவது யார். ஆட்சியை யார்கிட்ட கொடுக்கப் போகிறோம்.

அவர்களுக்கு என்ன தகுதி இருக்கிறது. இதற்கு முன்னாடி அவர்கள் என்ன செய்தார்கள், என்ன சொல்கிறார்கள் என்பதை அலசி ஆராய்ந்து ஓட்டு போடுங்கள்” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here