‘மஞ்சும்மல் பாய்ஸ்’ டீம் உடன் இணைந்த விக்ரம் – ரசிகர்கள் செம்ம ஹாப்பி..!

0
102

‘Manjummel Boys’: மலையாள இயக்குநர் சிதம்பரம் பொடுவால் இயக்கத்தில் சௌபின் ஷாஹிர், ஸ்ரீநாத் பாஸி உள்ளிட்ட பல இளம் நடிகர்கள் நடித்து மாபெறும் ஹிட்டாகியுள்ள படம் ‘மஞ்சும்மல் பாய்ஸ்’.

இந்த படம் கடந்த பிப்ரவரி 22ஆம் தேதி ரிலீஸானது. கமல்ஹாசனின் ‘குணா’ படத்தில் இடம்பெற்ற குகையை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ள இப்படத்திற்கு தமிழ்நாட்டில் ஹவுஸ் ஃபுல்லாகி ஓடிக்கொண்டிருக்கிறது.

இதுவரை 220 கோடி ரூபாய்க்கும் மேலாக வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இதன் மூலம் 200 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்த முதல் மலையாள படம் என்ற பட்டத்தைப் பெற்றுள்ளது.

இந்த படத்தைப் பார்த்த பலரும் படக்குழுவுக்கு வாழ்த்து கூறி வருகின்றனர். இந்த நிலையில் தற்போது புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ பட இயக்குநர் சிதம்பரம் அடுத்ததாக விக்ரமை வைத்து படம் இயக்குவதாக தகவல் வெளியாகியுள்ளது.

முன்னதாக படத்தை பார்த்த விக்ரம் இயக்குநரை நேரில் சந்தித்து வாழ்த்து கூறியிருந்தார். இந்த நிலையில் விக்ரமின் அடுத்த படத்தின் இயக்குநராக சிதம்பரம் தேர்வு செய்யப்பட்டுள்ள செய்து ரசிகர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here