சென்னையின் முன்னாள் மேயர் சைதை சா. துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி இயக்குநராக அறிமுகமான படம் ‘என்றாவது ஒரு நாள்’. இயக்குநர் வெற்றி துரைசாமி, ஹிமாச்சல பிரதேசத்தில் உள்ள சட்லஜ் ஆற்றில் விபத்துக்குள்ளான வாகனம் கவிழ்ந்த விபத்தில் அவர் காணாமல் போனார்.
இந்த விபத்தில் வெற்றி துரைசாமியுடன் பயணித்த மற்றுமொருவர் காயங்களுடன் மீட்கப்பட்ட நிலையில் டென்சின் என்ற கார் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
ஆனால், வெற்றி துரைசாமியை மட்டும் காணவில்லை. சுமார் 8 நாட்களுக்குப் பிறகு அவரது உடல் சடலமாக மீட்கப்பட்டது. இந்த செய்தி தமிழ் சினிமாத்துறையினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வெற்றி துரைசாமியின் இறப்புக்கு திரைப்பிரபலங்கள் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். மேலும், வெற்றியின் தந்தை முன்னாள் மேயர் என்பதால், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் வெற்றியின் இறப்பிறகு இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இந்த நிலையில், தற்போது வெற்றி துரைசாமி மற்றும் நடிகர் அஜித்குமார் இருவரும் ஒன்றாக புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இருவரும் நண்பர்கள் என கூறப்படுகிறது.
மேலும், வெற்றி துரைசாமியின் இறப்பிற்கு அஜித் குமார் நேரில் செல்ல வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. மேலும், வெற்றி துரைசாமியின் நிச்சயதார்த்தத்திற்கு நடிகர் அஜித் நேரில் சென்றதாகவும் கூறப்படுகிறது.
தொடர்ந்து, மீட்கப்பட்ட வெற்றி துரைசாமியின் உடல் உடற்கூராய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதன் பிறகு அவரது உடல் சென்னை கொண்டுவரப்பட உள்ளது.