தனியார் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்து பின்னர் தொலைக்காட்சி தொடரில் நடித்து சினிமா துறையில் நுழைந்தவர் பிரியா பவானி சங்கர். இவரும் அவருடன் படித்த ராஜவேல் என்பவரும் காதலித்து வருகின்றனர்.
பிரியா பவானி சங்கர், தன்னுடைய காதலுடன் அடிக்கடி வெளிநாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வதை வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில் தற்போது சுவிட்சர்லாந்துக்கு சுற்றுலா சென்றுள்ள பிரியா பவானி சங்கர் பனி படர்ந்த சாலையில் நின்றபடி விதவிதமாக புகைப்படங்களை எடுத்துள்ளார்.
இதனை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். காதலர் தின ஸ்பெஷலாக அவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.