‘தமிழக முன்னேற்ற கழகம்’.. வைரலாகும் நடிகர் விஜய்யின் கட்சி பெயர்..

0
106

Tamizhaga Munnetra Kazhagam: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய், லியோ படத்தை தொடர்ந்து அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘The Greatest of All Time’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதனைத் தொடர்ந்து விஜய்யின் அடுத்தடுத்த படங்கள் தொடர்பான தகவலும் அவ்வப்போது வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.

இது ஒருபுறம் இருக்க, மருபுறம் தனது அரசியல் குறித்த அப்டேட்டுகளையும் விஜய் வெளியிட்டு வருகிறார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர் அரசியல் கட்சியை பதிவு செய்ய மக்கள் இயக்கத்தில் பொதுக்குழுவில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து பிப்ரவரி மாதம் டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையத்தில் அரசியல் கட்சியின் பெயர் மற்றும் சின்னத்தை பதிவு செய்யவுள்ளனர்.

இந்த நிலையில் விஜய் தொடங்கவுள்ள அரசியல் கட்சிக்கும் ‘தமிழக முன்னேற்ற கழகம்’ என பெயர் வைத்திருப்பதாக சமூக வலைத்தளங்களில் ஒரு தகவல் வைரலாக பரவி வருகிறது.

இது உண்மையா என தெரியவில்லை, இருந்தபோதிலும் பிப்ரவரி முதல் வாரத்தில் கட்சியின் பெயர் மற்றும் கட்சியில் கொடி, சின்னங்களை நடிகர் விஜய் வெளியிடவுள்ளார். இந்த அறிவிப்பிற்காக பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், திரைத்துறையினரும், ரசிகர்களும் காத்திருக்கின்றனர்.

இதையும் படிங்க: ‘ஏஐ’ குரலால் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு வந்த பிரச்சினை..! என்ன நடந்தது?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here