தமிழ், தெலுங்கு, ஹிந்தி என அனைத்து மொழிப் படங்களிலும் நடித்து பிரபலமானவர் நடிகை டாப்சி. இவர் தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.
தொடர்ந்து ‘தக் தக்’ என்ற படத்தை டாப்சி தயாரித்தார். சமீபத்தில் ஷாருக்கான் மற்றும் டாப்ஸி நடிப்பில் வெளியான ‘டங்கி’ திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்தியாவில் இருந்து அமெரிக்கா செல்பவர்களை பற்றிய கதையை மையமாக வைத்து வெளியானது.
இந்த நிலையில், நடிகை டாப்சி வெளிநாடுகளுக்குச் செல்வதற்கான விசா நிபந்தனை மற்றும் நடைமுறைகள் குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார். பட நிகழ்ச்சி ஒன்றில் பேசிய டாப்ஸி, “வெளிநாடு செல்வதற்கு விசா பெறுவதற்காக தற்போது அமலில் இருக்கும் நிபந்தனைகள் கடுமையாக உள்ளன.
சமூகத்தில் உள்ள ஏழைகளுக்கு விசா நடைமுறைகள் எளிதாக இல்லை. தேவையான அளவுக்கு வங்கியில் பணம் இருப்பதை காட்டிவிட்டு செல்வந்தர்கள் சுலபமாக விசா பெற்று விடுகிறார்கள்.
ஆனால் குறைந்த வருமானத்தை ஈட்டிவருபவர்கள் விசா பெறமுடியாமல் பல பிரச்சினைகளை சந்தித்து வருகின்றனர். இதன் காரணமாக, வங்கி இருப்பில் பணம் குறைவாக இருந்த காரணத்தால் டங்கி படக்குழுவினரில் சிலர், அமெரிக்கா விசா பெற முடியாமல் போய் விட்டது” என பேசியிருக்கிறார்.