‘என் படத்தை ரிலீஸ் பண்ண கூடாதுனு சொல்ல நீ யாரு?’ – விஷால் ஆவேசம்.. யார் அந்த நபர் தெரியுமா?

0
71

Vishal’ : இயக்குநர் ஹரி இயக்கத்தில் நடிகர் விஷால் நடிக்கும் திரைப்படம் ‘ரத்னம்’. தாமிரபரணி, பூஜை படங்களுக்கு பிறகு இருவரும் இணையும் மூன்றாவது படம் இதுவாகும். இது விஷாலின் 34ஆவது படமாகும். இந்தப் படத்தில் விஷாலுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார்.

மேலும், கவுதம் வாசுதேவ் மேனன், சமுத்திரக்கனி, யோகிபாபு உள்ளிட்ட பல முன்னனி நடிகர்கள் நடிக்கின்றனர். இந்தப் படத்தை ஜீ ஸ்டூடியோஸ் சவுத் மற்றும் ஸ்டோன்பெஞ்ச் ஃபிலிம்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன.

இந்தப் படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இந்த படத்தில் டிரைலர் நேற்று (ஏப்ரல் 15) வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்த நிலையில் தற்போது விஷாலின் நேர்காணல் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதில், திரைப்பட விநியோகஸ்தர் குறித்து சரமாரியாக தாக்கி பேசியுள்ளார். அதில், “ஒரு படம் ரிலீஸ் ஆகுவதை தள்ளிப்போய் ரிலீஸ் செய்ய சொல்ல யாருக்கும் எந்த அதிகாரமும் கிடையாது. சினிமா என் கையில் இருக்கு என சொன்னவர்கள் எல்லாரும் உருப்படாமல் தான் போகியுள்ளனர்.

என் படத்தை தயாரித்த தயாரிப்பாளர் அங்கு வட்டி கட்டி கொண்டிருக்கிறார். நீங்க ஏசி ரூமில் உட்கார்ந்துக் கொண்டு, அந்த படம் வரக்கூடாது, இந்த படம் வரக்கூடாது என சொல்லி வரீங்க. இதற்கெல்லாம் உங்களுக்கு யாரு அதிகாரம் கொடுத்தது. நீங்க தான் தமிழ் சினிமாவ குத்தகைக்கு எடுத்திருக்கீங்களா?.

ரூ. 65 கோடி செலவில் மார்க் ஆண்டனி படம் தயாரிக்கப்பட்டது. செப்டம்பர் 15ஆம் தேதி ரிலீஸ் என பல நாட்களுக்கு முன்பாகவே தயாரிப்பாளர் அறிவித்து விட்டார். பின்னர் வேறு தேதியில் ரிலீஸ் செய்யுங்கள் என சொல்ல நீ யார்.

நீயும் உன் படத்தை ரிலீஸ் செய், நானும் ரிலீஸ் செய்றேன் எந்த படம் பார்க்க வேண்டும் என மக்களே முடிவு பண்ணட்டும். நீங்க மட்டும் தான் ரிலீஸ் செஞ்சு சம்பாதிக்க வேண்டும் என எதுவும் ஸ்ரூல் இருக்கா?” என ஆவேசமாக பேசினார்.

இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. இந்த வீடியோவைப் பார்த்த ரசிகர்கள் அந்நபர் உதயநிதி ஸ்டாலின் தான் என கூறி வருகின்றனர். இது உண்மையா என தெரியவில்லை.

உதயநிதியும் ஸ்டாலினும் சிறு வயதில் இருந்தே நண்பர்கள் என்பது அனைவருக்கும் தெரியும் இந்த நிலையில் தற்போது விஷால் பேசிய பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here