‘தளபதிக்கு நன்றி சொன்ன புரட்சி தளபதி’ – நடிகர் சங்கத்திற்கு ஒரு கோடி கொடுத்த விஜய்..!

0
122

Vijay – Vishal: தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் கட்டப்பட்டு வரும் கட்டிடம் பல ஆண்டுகளாக நிதி நெருக்கடி காரணமாக கட்டப்படாமல் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் நடிகர் நாசர் வெற்றி பெற்றார். இவர் தலைமையிலான அணி நடிகர் சங்கத்திற்காக பிரமாண்டமான கட்டிடம் கட்ட முடிவு செய்தது.

தொடர்ந்து இதற்கான பணிகள் தொடங்கப்பட்டு தியாகராய நகர் அருகே இந்த கட்டிடம் கட்டப்பட்டு வந்தது. ஆனால், திடீரென நிதி நெருக்கடி ஏற்பட்டதன் காரணமாக கட்டிடம் கட்டும் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டது.

இந்த நிலையில் மீண்டும் இந்த கட்டிடத்தை கட்ட நிதி திரட்டும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதனையறிந்த அமைச்சர் உதயநிதி ஸ்டார் நடிகர் சங்க கட்டிடம் கட்ட ஒரு கோடி ரூபாய் வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து தற்போது மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவரும், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் அறக்கட்டளை உறுப்பினருமான நடிகர் கமல்ஹாசன் நடிகர் சங்கம் கட்ட ஒரு கோடி ரூபாய் வழங்கியுள்ளார்.

இந்த நிலையில், நேற்று தமிழக வெற்றிக் கழகத்தில் தலைவர் நடிகர் விஜய், நடிகர் சங்க கட்டம் கட்டுவதற்கு ஒரு கோடி ரூபாய் வழங்கினார். இதற்கு, நடிகர் சங்கம் சார்பில் நன்றி தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டது.

இந்த நிலையில், தற்போது நடிகர் விஷால் நடிகர் சங்கம் கட்டடத்திற்கு ஒரு கோடி ரூபாய் வழங்கிய விஜய்க்கு நன்றி தெரிவித்து தனது ‘ X’ தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். தற்போது இந்த பதிவு சமூக வலைத்தளஙகளில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here