‘கொரோனா குமார்’ டூ ‘வைப் குமார்’ – கோகுலின் அடுத்த படத்தின் ஷூட்டிங் விரைவில்..!

0
91

Vibe Kumar: தமிழ் சினிமாவில் ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’, ‘காஷ்மோரா’ போன்ற படங்களை இயக்கி பிரபலமானவர் இயக்குநர் கோகுல். இவர் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான ‘சிங்கப்பூர் சலூன்’ படம் மாபெரும் ஹிட்டானது.

இந்த நிலையில் தற்போது நடிகர் விஷ்ணு விஷாலை வைத்து புதிய படம் ஒன்றை இயக்குகிறார். இந்த படத்தை விஷ்ணு விஷால் தன்னுடைய விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் நிறுவனம் மூலம் தயாரிக்கிறார்.

முன்னதாக இந்த கதையை சிம்புவிடம் கூறியதாகவும் சிம்புவை வைத்து இயக்க இருப்பதாகவும் கூறப்பட்டது. அந்த படத்திற்கு ‘கொரோனா குமார்’ என பெயரிடப்பட்டிருந்தது.

இந்த நிலையில், தற்போது அந்த பெயர் ‘வைப் குமார்’ என மாற்றப்பட்டு அதில் விஷ்ணு விஷால் நடிக்க இருக்கிறார். இந்த திரைப்படம் உண்மையில் நடந்த ஒரு சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டவுள்ளது.

இந்த படத்தில் கதாநாயகியாக அதிதி ஷங்கர் நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மிகப்பெரும் பட்ஜெட்டில், மிரட்டலான ஆக்ஷன் படமாக உருவாக்கப்படவுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விஷ்ணு விஷால் நடித்துவரும் திரைப்படங்களின் பணிகள் முடிந்தவுடன் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here