‘நானும் சூரியும் இப்போது பேசிக்கொள்வோம்’ – சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த விஷ்ணு விஷால்..!

0
105

Vishnu Vishal: தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் நடிகர் விஷ்ணு விஷால். இவர் கடைசியாக ‘கட்டா குஸ்தி’ என்ற படத்தில் நடித்திருந்தார். அதன் பின்னர் அவரது படங்கள் ரிலீஸ் ஆகவில்லை. இந்த நிலையில், தற்போது அவர் நடித்திருக்கும் ‘லால் சலாம்’ திரைப்படம் ரிலீஸ் ஆகவுள்ளது.

இந்த நிலையில், நடிகர் விஷ்ணு விஷால், சமீபத்தல் நடந்த நேர்காணிலி பேசிய அவர், நடிகர் சூரியும், தானும் மீண்டும் பேசத்தொடங்கியதாக கூறியிருக்கிறார். முன்னதாக, நடிகர் சூரி, விஷ்ணு விஷாலின் தந்தை அன்புவேல் ராஜன் மீது மோசடி வழக்குத் தொடர்ந்திருந்தார்.

நில விவகாரத்தில் தன்னை ஏமாற்றியதாக நடிகர் சூரி விஷ்ணு விஷாலின் தந்தை மீது குற்றம் சாட்டினார். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும், இது குறித்து விஷ்ணு விஷால் தனது எதிர்ப்புகளைத் தெரிவித்து வந்தார்.

மேலும், அந்த நேரத்தில் விஷ்ணு விஷால் சமூக ஊடகங்களில் உண்மைக்காகக் காத்திருங்கள் என்று கேட்டுக்கொண்டார். இதனால், இவர்களுக்குள் நீண்ட காலமாக பேச்சுவார்த்தை இல்லாமல் போனது.

‘வெண்ணிலா கபடி குழு’ படத்தின் மூலம் அறிமுகமான இருவரும் தொடர்ந்து படங்களில் நடித்து வந்தனர். முக்கியமாக ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்’ என்ற படத்தில் இவர்களது காமெடி பெரிய அளவில் ஒர்க்கவுட் ஆகியிருந்தது. மேலும், இந்த படம் மாபெரும் வெற்றியப் பெற்றது.

இந்த நிலையில், சமீப காலமாக இருவரும் பேசிக்கொள்ளாமல் இருப்பதால் இவர்களது ஜோடியில் எந்த படமும் வெளியாகவில்லை. இந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நடிகர் விஷ்ணு விஷாலும், சூரியும் இணைந்து ஒரு புதிய படத்தில் நடிக்க இருப்பதாக உள்ளனர்.

இது குறித்த அடுத்தக்கட்ட அறிவிப்பை படக்குழு வெளியிடும்போது ரசிகர்களுக்கு விரைவில் தெரிய வரும் என விஷ்ணு விஷால் கூறியுள்ளார். மேலும், தனது தந்தை மீதான அனைத்து குற்றச்சாட்டுகளுக்கும் விரைவில் பதில் தெரியவரும் எனவும் விஷ்ணு விஷால் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here