‘காலம் தான் பதில் சொல்லும்’.. விஷ்ணு விஷால் – சூரி பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்த புகைப்படம்..!

0
130

Actor Vishnu Vishal: தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் நடிகர் விஷ்ணு விஷால். இவர் கடைசியாக ‘லால் சலாம்’ படத்தில் நடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து பல படங்களில் நடிக்க கமிட்டாகி நடித்து வருகிறார்.

விஷ்ணு விஷாலுக்கும், நடிகர் சூரிக்கும் இடையே இருந்த விவகாரம் அனைவருக்கும் தெரியும். நடிகர் சூரி, விஷ்ணு விஷாலின் தந்தை அன்புவேல் ராஜன் மீது மோசடி வழக்குத் தொடர்ந்திருந்தார்.

நில விவகாரத்தில் தன்னை ஏமாற்றியதாக நடிகர் சூரி விஷ்ணு விஷாலின் தந்தை மீது குற்றம் சாட்டினார். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும், இது குறித்து விஷ்ணு விஷால் தனது எதிர்ப்புகளைத் தெரிவித்து வந்தார்.

மேலும், அந்த நேரத்தில் விஷ்ணு விஷால் சமூக ஊடகங்களில் உண்மைக்காகக் காத்திருங்கள் என்று கேட்டுக்கொண்டார். இதனால், இவர்களுக்குள் நீண்ட காலமாக பேச்சுவார்த்தை இல்லாமல் போனது.

‘வெண்ணிலா கபடி குழு’ படத்தின் மூலம் அறிமுகமான இருவரும் தொடர்ந்து படங்களில் நடித்து வந்தனர். முக்கியமாக ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்’ என்ற படத்தில் இவர்களது காமெடி பெரிய அளவில் ஒர்க்கவுட் ஆகியிருந்தது. மேலும், இந்த படம் மாபெரும் வெற்றியப் பெற்றது.

இந்த நிலையில், சமீப காலமாக இருவரும் பேசிக்கொள்ளாமல் இருப்பதால் இவர்களது ஜோடியில் எந்த படமும் வெளியாகவில்லை. இந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நடிகர் விஷ்ணு விஷால், அவரது தந்தை மற்றும் சூரி ஆகியோர் ஒன்றாக இருக்கும் புகைப்படத்தை விஷ்ணு விஷால் வெளியிட்டுள்ளார்.

அதில், “நேரம் தான் அனைத்திற்கும் பதில் கூறும்’ என குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் இவர்களுக்குள் இருந்த பிரச்சினை முடிவடைந்துவிட்டது தெரியவந்துள்ளது. இதனால், வரும் படங்களில் இருவரும் இணைந்து நடிக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here