இணையத்தில் வைரலாகும் ‘ஹே சுனாமிகா’ பாடல்…!

0
118

Sunamika Lyric Video: இயக்குநர் லோகேஷ் கனகராஜிடம் இணை இயக்குநராக பணியாற்றியவர் வெங்கி. இவரது இயக்கத்தில் நடிகர் சதீஷ் நடித்துள்ள திரைப்படம் ‘வித்தைக்காரன்’. இதில், சதீஷுக்கு ஜோடியாக சிம்ரன் குப்தா நடித்துள்ளார்.

மேலும் ஆனந்தராஜ், ஜான் விஜய், ரமேஷ் திலக், தங்கதுரை, மதுசூதனன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். அருள்நிதி நடிப்பில் வெளியான ‘தேஜாவு’ படத்தை தயாரித்த வைட் கார்ப்பட் பிலிம்ஸ் சார்பில் கே.விஜய் பாண்டி இந்த படத்தை தயாரித்துள்ளார்.

இந்த படத்துக்கு வி.பி.ஆர். இசையமைத்துள்ளார். யுவ கார்த்திக் ஒளிப்பதிவு செய்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடம் கவனம் ஈர்த்தது.

இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் புதிய பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி ‘சுனாமிகா’ என்ற பாடலின் லிரிக் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

இந்த பாடலை கவிஞர் வைரமுத்து எழுத, ஹரிஹரன் பாடியுள்ளார். இந்த பாடல் தற்போது வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க: விஜய் ஆண்டனியுடன் இணைந்த உதயநிதி ஸ்டாலின்..! ‘ரோமியோ’ படத்தின் புதிய அப்டேட்..!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here