நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அனைத்துக் கட்சியும் தங்களது கூட்டணி குறித்து முடிவுகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து, அரசியல் பணிகளில் அனைத்துக் கட்சிகளும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இந்த நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதி அநேகமாக வரும் சனிக்கிழமை அல்லது ஞாயிற்றுக்கிழமை அன்று அறிவிக்கப்படம் என எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடன் அன்று முதல் தேர்தல் நடைமுறை அமலுக்கு வந்துவிடும்.
மேலும், அந்த தினத்தில் இருந்து முதலமைச்சர் முதல் அமைச்சர்கள் வரை அனைவரும் தங்களது கட்சிப் பணிகளுக்கு செல்லும் போது அரசு வாகனங்களை பயன்படுத்தக்கூடாது, சொந்த கார்கள் அல்லது தனியார் வாகனங்களில் மட்டும் தான் செல்ல வேண்டும்.
மேலும், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் சட்டப்பேரவை உறுப்பினர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகம் மூடப்படும். இதனை உறுதிபடுத்தக்கோரி மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மாநகராட்சி ஆணையர்களுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டும்.
தேர்தல் தேதி இன்னும் சில திங்களில் அறிவிக்க இருக்கும் நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் இப்போதே தங்களது அலுவலகத்தில் உள்ள தங்களது சொந்த பொருட்களை அப்புறப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.