தளபதி குரலில் தரமாக வெளியான ‘விசில் போடு’ பாடல்.. ரசிகர்கள் கொண்டாட்டம்..

0
97

Whistle Podu: இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் படம் ‘The Greatest of all Time’. இந்த படத்தை ஏஜிஎஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரித்து வருகிறது.

தளபதிக்கு ஜோடியாக நடிகை மீனாட்சி சவுத்ரி நடிக்கிறார். மேலும், சினேகா மற்றும் லைலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளனர்.

அதுமட்டுமல்லாமல் நடிகர்கள் இந்த படத்தில் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, ஜெயராம், கணேஷ், யோகிபாபு, அஜ்மல் அமீர், வைபவ், பிரேம் ஜி, அரவிந்த் ஆகாஷ், அஜய் ராஜ், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

படத்தின் படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு இயக்குநர் வெங்கட் பிரபு படம் குறித்து புதிய அப்டேட்டை வெளியிட்டார். அதன்படி, ‘The Greatest of all Time’ படம் செப்டம்பர் 5ஆம் தேதி ரிலீஸாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்தது. அந்த அவகையில், படத்தின் பர்ஸ்ட் சிங்கிளான ‘விசில் போடு’ என்ற பாடல் தற்போது வெளியாகியுள்ளது.

யுவனின் மாஸ் இசையில், விஜய்யின் குரலில் வெளியான இந்த பாடலுக்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்து வருகின்றனர். தொடர்ந்து, இணையத்தில் இந்த ‘விசில் போடு’ பாடல் டிரெண்டாகி ரசிகர்களை குத்தாட்டம் போட வைத்து வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here