Azhagi: இயக்குநர் தங்கர்பச்சான் இயக்கத்தில் 2002ஆம் ஆண்டு நடிகர் பார்த்திபன், நந்திதா தாஸ், தேவயானி ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘அழகி’. சிறுவயது பார்த்திபனுக்கும், நந்திதா தாஸ்-க்கு இடையே காதல் ஏற்படுகிறது.
இருவரும் காதலித்து வந்த நிலையில் குடும்ப சூழல் காரணமாக அவர்கள் இருவரும் சிறுவயதிலேயே பிரிந்துவிடுகின்றனர். அதன் பிறகு நந்திதா தாஸ் ஒரு ஏழ்மையான நபருக்கு திருமணம் நடத்தி வைக்கின்றனர்.
மருபுறம் பார்த்திபன் ஒரு நல்ல நிலைமையில் தேவையானியை திருமணம் செய்துகொண்டு வசதியான வாழ்க்கையை நடத்தி வருகின்றனர். அப்போது, ஒரு நாள் தனது சிறுவயது காதலியான நந்திதா தாஸை, பார்த்திபன் பார்க்கிறார்.
ஏழ்மையான வாழ்க்கையை அவர் வாழ்வதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பார்த்திபன், நந்திதா தாஸை தன்னுடன் தனது வீட்டிற்கு அழைத்து வந்து அவருக்கு ஒரு வேலை வாழ்ங்கிக் கொடுக்கிறார்.
நந்திதா தாஸை பார்த்திபன் அழைத்து வந்த பிறகு அந்த குடும்பத்திற்குள் ஏற்படும் மாறுதல் தான் படத்தின் திரைக்கதையாகும். இந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்திருக்கிறார்.
இந்த படத்தில் வரும் ஒவ்வொரு பாடல்களும் மாபெரும் ஹிட்டானது. முக்கியமாக சிறுவயது காதல் கதையில் இருவருக்கும் இடையே ஏற்படும் காதலின் போது வருகிற ‘ஒளியிலே தெரிவது தேவையா’ என்ற பாடல் இன்றளவும் ரசிக்கப்பட்டு வருகிறது.
2002ஆம் ஆண்டு வெளியான இந்த படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது. இந்த நிலையில் தற்போது இந்த ‘அழகி’ படத்தை மீண்டும் திரைக்கு கொண்டு வர படக்குழு முடிவு செய்துள்ளது.
அந்த வகையில், தற்போது ‘அழகி’ படத்தை 4K, 5:1 தொழில்நுட்பத்துடன் வருகிற மார்ச் 29ஆம் தேதி ரீரிலீஸ் செய்யப்படுகிறது. இது குறித்த போஸ்டரை இயக்குநர் வெங்கட்பிரவு வெளியிட்டார். தற்போது இந்த போஸ்டர் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த நிலையில், ‘அழகி’ படம் ரீரிலீஸ் குறித்து படத்தில் நடித்த அனைத்து நடிகர்களும் தங்களது அனுபவத்தை பகிர்ந்துகொள்ளும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.