ஸ்ரீதேவி இறப்பில் சந்தேகம்: போலி ஆவணம் சமர்ப்பித்த பெண்!

0
73

இந்திய பிரபல நடிகை ஸ்ரீதேவி, ஐக்கிய அரபு எமிரேட்சின் துபாய் நகரில் 2018ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் சந்தேகத்திற்கு இடமான முறையில் உயிரிழந்தார்.

இது தொடர்பாக ஒடிசா மாநிலம் புவனேஸ்வரைச் சேர்ந்த தீப்தி பின்னிட்டி என்ற பெண், தான் நடத்திய விசாரணையின் அடிப்படையில் சமூக வலைதளத்தில் விவாதம் நடத்தினார். அப்போது, ஸ்ரீதேவியின் இறப்பில் இரண்டு நாட்டு அரசுகள் உண்மையை மறைப்பதாக குற்றம் சாட்டினார்.

மேலும், ஸ்ரீதேவியின் இறப்பு குறித்து தனது கருத்துக்கு பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் ஆதரவான நிலைப்பாட்டை கொண்டுள்ளதாகக் கூறி போலி ஆவணங்களை சமர்ப்பித்திருக்கிறார்.

இது தொடர்பாக மும்பை வழக்கறிஞர் சாந்தினி ஷாவின் புகாரின் அடிப்படையில், பிரதமர் அலுவலகம் பரிந்துரைப்படி சிபிஐ, கடந்த ஆண்டு பின்னிட்டி மீது வழக்குப்பதிவு செய்துள்ளது.

இதையடுத்து, ஸ்ரீதேவியின் இறப்பு தொடர்பாக பின்னிட்டி சமர்ப்பித்த ஆவணங்கள் போலியானவை எனக்கூறி, தீப்தி பின்னிட்டி மீது சிபிஐ, நேற்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

இது குறித்து, தீப்தி பின்னிட்டி கூறியிருப்பதாவது, “என் வாக்குமூலத்தை பதிவு செய்யாமல் சிபிஐ, என் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படும் போது, அதற்கான ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்படும்” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here