‘பெண்கள் மீது எனக்கு முழுமையான நம்பிக்கை உள்ளது’ – நடிகர் சூர்யா..!

0
125

சென்னை, கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெறும் EMPOW HER – 2024 என்ற சர்வதேச கருத்தரங்கு விழா இன்று (மார்ச் 18) தொடங்கியது. இரண்டு நாட்களாக நடைபெற இருக்கும் இந்த கருத்தரங்கை நடிகர் சூர்யா தொடங்கி வைத்தார்.

பின்னர் விழாவில் பேசிய அவர், “அகரம் சார்பாக அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் ஆகியவற்றை உள்ளடக்கிய (STEM) குறித்து கருத்தரங்கம் நடப்பது மகிழ்ச்சியாக உள்ளது.

அகரம் ஆரம்பித்து 15 ஆண்டுகளில் இதுவரை 6 ஆயிரம் மாணவர்கள் படித்திருக்கின்றனர். இதில், பலர் தற்போது படித்து வருகின்றனர். இதில் 70 விழுக்காடு பேர் பெண்கள்.

ஏராளமான கண்டுபிடிப்புகளில் பெண்களின் பங்களிப்பு பெரும்பான்மையாக உள்ளன. ஆனால், வழக்கம்போல் அவற்றில் ஆண்கள் மட்டுமே கவனிக்கப்பட்டு, பாராட்டப்படுகின்றனர்.

பெண்கள் மீது எனக்கு முழுமையான நம்பிக்கை உள்ளது. உடல் வலிமை கொண்ட விளையாட்டுகளில் கூட பெண்கள் தான் உயரத்துக்கு செல்கின்றனர். மக்களுக்கான தேவையைப் பூர்த்தி செய்யும் விதமான கண்டுபிடிப்புகளைப் பெண்கள் அதிகளவில் உருவாக்கியுள்ளனர். இதனை ஆய்வறிக்கை கூறுகிறது.

இத்தகையை விஷயங்களை அடிப்படையாகக் கொண்டுதான் இந்த கருத்தரங்கு நடைபெறுகிறது. இந்திரா நூயி புத்தகத்தை வாங்கி படியுங்கள். பெண்கள் அங்கீகாரம் பெறுவதற்கு ஆண்களைவிட 50 விழுக்காடு அதிகமாக பெண்கள் உழைக்க வேண்டி இருக்கிறது” என தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here