‘Yash 19 Title Reveal’: யஷ் நடிக்கும் படத்தின் மிரட்டல் டைட்டில் வெளியீடு.. ரசிகர்கள் உற்சாகம்!

0
99

கேஜிஎப் 2 படத்தின் வெற்றிக்குப் பிறகு யஷ்-ன் அடுத்த படம் குறித்து எந்த ஒரு அப்டேட்டும் வெளிவரவில்லை. இந்த நிலையில் யஷ் நடிக்கும் அடுத்த படத்திற்கான டைட்டில் மற்றும் ரிலீஸ் தேதி தற்போது வெளியாகியுள்ளது.

கேஜிஎப்-ன் வெற்றி:

கேஜிஎப் திரைப்படத்தின் மூலம் திரையுலகத்தைத் திரும்பிப் பார்க்க வைத்தவர் யஷ். கன்னட திரையுலகை மிகப்பெரிய உயரத்துக்குக் கொண்டு சென்ற படம் கேஜிஎப். இந்த படத்தில் இரண்டு பாகங்கள் வெளியாகியுள்ளன. இந்த இரண்டு பாகங்களுமே மிகப்பெரிய வெற்றி பெற்றன.

மேலும், மூன்றாம் பாகம் வெளிவரும் என இரண்டாம் பாகத்தின் முடிவில் அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த வகையில் கேஜிஎப் படத்தின் மூன்றாம் பாகத்திற்காக ரசிகர்கள் வெறிகொண்டு காத்திருக்கின்றனர். அந்த அளவிற்கு கேஜிஎப் திரைப்படம் மக்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

யஷ்-ன் புதிய அப்டேட்:

அதிலும் குறிப்பாகக் கடந்தாண்டு ரிலீஸ் ஆன கேஜிஎப் படத்தின் இரண்டாம் பாகம் பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய வசூல் சாதனையை நிகழ்த்தியது. 1100 கோடி ரூபாய்க்கு மேல் வசூலையும் வாரிக் குவித்திருக்கிறது. கேஜிஎப் 2 படம் ரிலீஸ் ஆகி ஒன்றரை ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் தன்னுடைய அடுத்த படம் குறித்த அப்டேட்டை யஷ் வெளியில் கூறாமல் இருந்தார்.

இந்நிலையில், கடந்த வாரம் அதுகுறித்த ஒரு அப்டேட்டை வெளியிட்டார். அதில், யஷின் 19ஆவது திரைப்படத்தை கீத்து மோகன் தாஸ் இயக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. மேலும், இப்படத்திற்கான டைட்டில் டிசம்பர் 8ஆம் தேதி அறிவிக்கப்படும் எனவும் அந்த அப்டேட்டில் குறிப்பிடப்பட்டிருந்தது.

‘யஷ்19’ டைட்டில்:

அதன்படி, இன்று படத்தின் டைட்டல் வெளியாகியுள்ளது. யஷ்-ன் அடுத்த படத்திற்கான டைட்டில் டாக்ஸிக் (TOXIC) என பெயரிடப்பட்டுள்ளது. இது குறித்து அதிகாரப்பூர்வமான மோஷன் போஸ்டர் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. அதில், ஜோக்கர்களும், துப்பாக்கி ஏந்திய யஷ்ஷும் இடம்பெற்றுள்ளனர்.

மேலும், இப்படத்தின் ஷூட்டிங் இன்னும் தொடங்காத நிலையில், படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளனர்.

அதன்படி ‘டாக்ஸிக்’ வருகிற 2025ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 10ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தினை முடித்துவிட்டு யஷ் மீண்டும் கேஜிஎப் மூன்றாம் பாகத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here