மின்சாரம் தாக்கி உயிரிழந்த யஷ் ரசிகர்கள்.. நேரில் சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல்!

0
128

ctor Yash: ராக்கிங் ஸ்டார் என ரசிகர்களால் அழைக்கப்படுபவர் கன்னட நடிகர் யஷ் நேற்று (ஜன.08) தனது 38ஆவது பிறந்த நாளை கொண்டாடினார். இந்த நிலையில் கர்நாடக மாநிலம் கடக் மாவட்டத்திலுள்ள சுரங்கி என்ற கிராமத்தில் அவரது ரசிகர்கள் யஷ்-க்கு கட்டவுட் வைக்க முடிவு செய்துள்ளனர்.

அப்போது, மின்சாரம் தாக்கி அப்பகுதியைச் சேர்ந்த யஷ் ரசிகர்கள் ஹனமந்த ஹரிஜன் (21), முரளி நடவினமணி (20), நவீன் காஜி (19) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இச்சம்பவம் குறித்து தகவலறிந்த நடிகர் யஷ், உடனடியாக உயிரிழந்த ரசிகர்களின் வீடுகளுக்குச் சென்று அவர்களது குடும்பத்தாருக்கு தனது ஆறுதலை தெரிவித்தார். தொடர்ந்து, “ரசிகர்கள் யாரும் இது போன்ற செயலில் ஈடுபட வேண்டாம்.

உங்களின் அன்பை சமூக வலைதளங்களில் செல்போனில் காண்பித்தால் கூட போதும். மனதில் இருந்தால் போதும். கட்டவுட் வைத்துதான் அதனை வெளிப்படுத்த வேண்டாம் என்ற தேவையில்லை. இதுபோன்று செயலில் எதிர்காலத்தில் யாரும் ஈடுபடக் கூடாது, இந்த செயலை தவிர்த்துவிடுங்கள்” என ரசிகர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

இதையும் படிங்க: சூரி நடிக்கும் ‘கருடன்’ பட ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here