‘ஜெகன் மோகன் ரெட்டியின் இளம் வயது அரசியல்’.. ஓடிடியில் வெளியான ‘யாத்ரா 2’..

0
75

‘Yatra 2’: மறைந்த ஆந்திர முதலமைச்சர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் வாழ்க்கை கதையை ‘யாத்ரா’ என்ற பெயரில் 2019ஆம் ஆண்டு திரைப்படமாக வெளிவந்தது. இந்த படத்தில் ராஜசேகர ரெட்டி கதாபாத்திரத்தில் மம்முட்டி நடித்திருந்தார்.

இதன் தொடர்ச்சியாக ராஜசேகர ரெட்டியின் மகனும் தற்போதைய ஆந்திர முதலமைச்சரான ஜெகன் மோகன் ரெட்டியின் வாழ்க்கை கதை ‘யாத்ரா-2’ என்ற பெயரில் உருவாக்கப்பட்டது.

மஹி வி ராகவ் இயக்கியுள்ள இந்த படத்தில் ஜெகன் மோகன் ரெட்டியின் கதாபாத்திரத்தில் நடிகர் ஜீவா நடித்துள்ளார். இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

ஜெகன் மோகன் ரெட்டியின் இளம் வயது அரசியல் வாழ்க்கையில் இருந்து ஆந்திர முதலமைச்சரானது வரை நடந்த சம்பவங்கள் இந்த படத்தில் இடம்பெறவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த ‘யாத்ரா-2’ திரைப்படம் கடந்த பிப்ரவரி 8ஆம் தேதி ரிலீஸானது. தொடர்ந்து இந்த படத்திற்கு ரசிகர்கள், ஜெகன் மோகன் ரெட்டி தொண்டர்கள் நல்ல வரவேற்பு கொடுத்தனர்.

இந்த நிலையில் தற்போது இந்த படம் பிரபல ஓடிடி தளமான அமேசான் பிரைமில் வெளியாகியுள்ளது. திரையரங்குகளில் கிடைத்த வெற்றியைப் போலவே ஓடிடி தளத்திலும் நல்ல வரவேற்பு கிடைக்கும் எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here