ஜெகன் மோகன் ரெட்டியின் வாழ்க்கை வரலாறு.. – தெறிக்கவிடும் ‘யாத்ரா 2’ படத்தின் டிரைலர்..!

0
101

‘Yatra 2’: மறைந்த ஆந்திர முதலமைச்சர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் வாழ்க்கை கதையை ‘யாத்ரா’ என்ற பெயரில் 2019ஆம் ஆண்டு திரைப்படமாக வெளிவந்தது. இந்த படத்தில் ராஜசேகர ரெட்டி கதாபாத்திரத்தில் மம்முட்டி நடித்திருந்தார்.

இதன் தொடர்ச்சியாக ராஜசேகர ரெட்டியின் மகனும் தற்போதைய ஆந்திர முதலமைச்சரான ஜெகன் மோகன் ரெட்டியின் வாழ்க்கை கதை ‘யாத்ரா-2’ என்ற பெயரில் உருவாக்கப்பட்டு வருகிறது.

மஹி வி ராகவ் இயக்கியுள்ள இந்த படத்தில் ஜெகன் மோகன் ரெட்டியின் கதாபாத்திரத்தில் நடிகர் ஜீவா நடித்துள்ளார். இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

ஜெகன் மோகன் ரெட்டியின் இளம் வயது அரசியல் வாழ்க்கையில் இருந்து ஆந்திர முதலமைச்சரானது வரை நடந்த சம்பவங்கள் இந்த படத்தில் இடம்பெறவுள்ளதாக கூறப்படுகிறது.

சமீபத்தில் இந்த படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது. இந்த நிலையில் ‘யாத்ரா-2’ படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி இருக்கிறது.

இந்த டிரைலர் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த ‘யாத்ரா-2’ திரைப்படம் வரும் பிபரவரி 8ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here