Yours Shamefully.. கொச்சை வார்த்தைகளால் நிறைந்த ‘ஹாட்ஸ்பாட்’ டிரைலர்..! ரசிகர்கள் வரவேற்பு..!

0
139

HotSpot Trailer: தமிழில் ‘திட்டம் இரண்டு’, ‘அடியே’ ஆகிய படங்களை இயக்கிய விக்னேஷ் கார்த்தி இயக்கத்தில் வெளியாகவுள்ள திரைப்படம் ‘ஹாட்ஸ்பாட்’. இந்த படத்தில், கலையரசன், சாண்டி மாஸ்டர், அம்மு அபிராமி, ஜனனி ஐயர், கவுரி கிஷன், சோபியா, ஆதித்யா பாஸ்கர், சுபாஷ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

நான்கு வெவ்வேறு இடங்களில் நடக்கும் கதைகள், ஒரு கட்டத்தில் ஒன்று சேர்வதுதான் படத்தின் திரைக்கதை என இயக்குநர் கூறுகிறார். இதுவரை பேசாத விஷயங்கள் இந்த படம் பேசுவதாகவும் அவர் கூறினார்.

இந்த நிலையில், தற்போது ‘ஹாட்ஸ்பாட்’ படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. இந்த டிரைலரை நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தனது ‘X’ தளத்தில் வெளியிட்டார்.

அதன்படி இந்த டிரைலர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. பெண்ணியம், உடலுறவு, லெஸ்பியன் போன்றவற்றை பேசும் வகையில் இந்த டிரைலர் அமைந்துள்ளது.

டிரைலர் ஆரம்பித்தது முதல் கடைசி வரை கெட்ட வார்த்தைகள் அதிகம் இடம்பெற்றுள்ளன. இதனால், இந்த டிரைலருக்கு எதிரான கருத்துகளும் பரவி வருகின்றன.

முன்னதாக இயக்குநர் விக்னேஷ் கார்த்தி இயக்கிய இரண்டு படங்களும்வித்தியாசமான கதையம்சங்களை கொண்டுள்ளன. அதேபோல், இந்த படத்தில் யாரும் பேசாத விஷங்களை பேச இருக்கிறார். இதனால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here