‘Lover’ : நடிகர் மணிகண்டன் ஹீரோவாக நடித்த ‘லவ்வர்’ படத்தின் டீசர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. மேலும், இந்த டீசர் யூட்யூப் ட்ரெண்டிங்கில் நம்பர் ஒன் இடத்தைப் பிடித்துள்ளது.
நடிகர் மணிகண்டன் 2023ஆம் ஆண்டு நடித்த ‘குட் நைட்’ திரைப்படம் மிகப்பெரிய அளவில் ஹிட்டடித்தது. இந்நிலையில் நடிகர் மணிகண்டன் நடித்து திரைக்கு வரவிருக்கும் அடுத்த திரைப்படம் ‘லவ்வர்’.
இப்படத்தை அறிமுக இயக்குநர் பிரபுராம் வியாஸ் இயக்கியுள்ளார். இப்படத்தில் மணிகண்டனுக்கு ஜோடியாக ஸ்ரீகவுரி பிரியா நடித்துள்ளார். மேலும், கண்ணா ரவி, சரவணன், கீதா கைலாசம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இப்படமானது கல்லூரி முதல் ஆறுவருடங்களாகப் பெண் ஒருத்தியைக் காதலித்து வரும் இளைஞருக்கும், அப்பெண்மணிக்கும் இடையில் இருக்கும் உறவுச்சிக்கலைப் பற்றி படம் பேசுகிறது.
இந்த படப்பிடிப்பின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இப்படம் காதலர் தினமான பிப்ரவரி 14ஆம் தேதி திரைக்கு வரவுள்ளதாக கூறப்படுகிறது. யூட்யூப் ட்ரெண்டிங்கில் நம்பர் ஒன் இடத்தில் இருக்கும் லவ்வர் படத்தின் டீசரை பலரும் பாராட்டி வருகின்றனர்.
இதையும் படிங்க: ‘சலார்’ மேக்கிங் வீடியோவை வெளியிட்ட படக்குழு..!