Yuvan Shankar Raja: இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் படம் ‘The Greatest of all Time’. இந்த படத்தை ஏஜிஎஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரித்து வருகிறது.
தளபதிக்கு ஜோடியாக நடிகை மீனாட்சி சவுத்ரி நடிக்கிறார். மேலும், சினேகா மற்றும் லைலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளனர்.
அதுமட்டுமல்லாமல் நடிகர்கள் இந்த படத்தில் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, ஜெயராம், கணேஷ், யோகிபாபு, அஜ்மல் அமீர், வைபவ், பிரேம் ஜி, அரவிந்த் ஆகாஷ், அஜய் ராஜ், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்நிலையில், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா ‘The Greatest of all Time’ படத்தின் புதிய அப்டேட் ஒன்றை கூறியுள்ளார்.
சமீபத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த யுவனிடம் ‘The Greatest of all Time’ படத்தின் அப்டேட் குறித்து கேட்டனர். அதற்கு, அவர் சிரித்தபடியே எதுவும் சொல்ல முடியாது என கூறினார்.
பின்னர், ‘இந்த முறை தெளிவாக இருக்கேன், இனிமேல் பேச்சு இல்லை வீச்சுதான், நானும் ஆர்வமாகவுள்ளேன், படத்தின் அனைத்து வேலைகளும் நன்றாக நடைபெற்று வருகிறது’ என கூறியுள்ளார்.