தயாராகும் ‘யுவராஜ் சிங்’ பயோபிக்.. ஹீரோ யார் தெரியுமா?..

0
99

Yuvaraj Sing: இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டராக திகழ்ந்தவர் யுவராஜ் சிங். 2011ம் ஆண்டு ஏப்ரல் 2ஆம் தேதி நடைபெற்ற ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டியில் இந்தியா வெற்றிப் பெற்றதற்கு யுவராஜ் சிங்கிற்கும் பங்குண்டு.

இந்திய அணிக்காக 304 ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளிலும், 59 டி20 போட்டிகளிலும், 40 டெஸ்ட் போட்டிகளில் யுவராஜ் விளையாடியிருக்கிறார். இடையில் கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த யுவராஜ் சிகிச்சைக்குப் பின் மீண்டும் கிரிக்கெட்டில் அசத்தியவர்.

இவர் தற்போது தன்னுடைய பயோபிக் திரைப்படம் பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில், “என்னுடைய பயோபிக்கை நானே தயாரித்து, இயக்கி, நடிக்கவுள்ளேன். அதற்கு என்னை வாழ்த்துங்கள்.

அடுத்த சில ஆண்டுகளில் பெரிய திரையில் இதற்கான முடிவை நீங்கள் பார்ப்பீர்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார். யுவராஜ் சிங்கின் பயோபிக் குறித்து கடந்த சில ஆண்டுகளாகவே தகவல்கள் வெளிவந்தன.

அதில் முன்னணி பாலிவுட் நடிகர்கள் தயாரித்து, நடிக்க இருந்தனர். ஆனால், தற்போது யுவராஜ் சிங்கே இயக்கி நடிக்கப்போவதாக தெரிவித்துள்ளார். தொடர்ந்து இது குறித்து புதிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here